News December 11, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் முடிவு

image

<<18532516>>கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சிறப்பு குழுவை<<>> அமைத்துள்ள தவெக, விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. NDA கூட்டணியின் CM வேட்பாளராக EPS இருப்பது குறிப்பிடத்தக்கது. தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என நீங்க நினைக்கிறீங்க?

Similar News

News December 20, 2025

மனைவியுடன் கும்பாபிஷேகம் செல்லலாமே? தமிழிசை

image

இந்துக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால் அதற்கான விலையை திமுக அரசு கொடுக்க நேரிடும் என தமிழிசை செளந்தரராஜன் எச்சரித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உணர்வை CM ஸ்டாலின் புண்படுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், மனைவி சொல்வதை கேட்பதாக கூறும் CM ஸ்டாலின், அவரது மனைவியுடன் கோயில் கும்பாபிஷேகங்களுக்கு செல்லலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 20, 2025

கொத்தாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி முடிவு

image

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு <<18617983>>வாக்காளர் <<>>பட்டியலில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தங்கள் கட்சிக்காரர்களிடம் இருக்கும் பட்டியலையும், தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News December 20, 2025

வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு இவை அவசியம்

image

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், Form 6 படிவத்தை பூர்த்தி செய்வதோடு அரசு அங்கீகரித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை BLO-விடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்: *பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய அடையாள அட்டை *1987-க்கு முன்பு வங்கிகள், LIC வழங்கிய அடையாள அட்டை *பாஸ்போர்ட் *பிறப்பு, சாதி, வசிப்பிட, கல்விச் சான்று *உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்ப பதிவேடு.

error: Content is protected !!