News December 5, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?

Similar News

News December 6, 2025

தஞ்சை: தீக்கிரையான 4 கடைகள்

image

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவர் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோர் கடையில் இரவு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த விஜயகுமாரின் பஞ்சர் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

News December 6, 2025

விஜய்யுடன் கூட்டணி பேச்சு.. முதல் கட்சியாக அறிவிப்பு

image

லாட்டரி மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் டிச.14-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர தாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு தவெக விரும்பினால் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளை சார்லஸ் இழுக்க முயற்சித்தபோது, அவர்களில் சிலர் தவெகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

News December 6, 2025

10th போதும்.. ₹21,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை

image

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: 21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து டிச.31-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE IT.

error: Content is protected !!