News February 25, 2026

அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு

image

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி, 2026 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் ஷேக் தாவூத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதி திமுக ஏமாற்றி வருவதாகவும், மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டில் இம்முடிவை எடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார். இது சிறுபான்மை வாக்குகளை பெற வியூகம் வகுத்துவந்த MK ஸ்டாலின், விஜய் தரப்புக்கு சற்று அதிர்ச்சி கொடுத்துள்ளதாம்.

Similar News

News February 25, 2026

கேரள மக்களை இனி அழைப்பது எப்படி? சசிதரூர்

image

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்றுள்ள சசிதரூர், ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் கேரள மக்களை Keralite, Keralan என அழைப்பது வழக்கம். பெயர் மாற்றத்திற்கு ஏற்ப, Keralamite என்றழைப்பது ஒரு நுண்ணுயிரி போலவும், Keralamian என்றழைப்பது அரியவகை கனிமம் போலவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சசிதரூர், இது தேர்தல் ஸ்டண்ட் என்றும் கிண்டலடித்துள்ளார்.

News February 25, 2026

BREAKING: கட்சியில் இணைந்ததும் முக்கிய பதவி

image

IJK-வில் இருந்து விலகிய லீமா ரோஸ் மார்ட்டின், கடந்த பிப்.17-ல் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரை அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக நியமித்து EPS உத்தரவிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவருக்கு மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான இவர், ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 25, 2026

நல்லகண்ணுவின் உடலுக்கு CM ஸ்டாலின் இறுதி அஞ்சலி

image

CPI அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு CM ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உதயநிதி, கனிமொழி, சேகர்பாபு, ஆ.ராசா உள்ளிட்டோரும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த CM ஸ்டாலின், நல்லகண்ணுவின் மறைவு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்குமான பேரிழப்பு என தெரிவித்தார்.

error: Content is protected !!