News January 19, 2026

அதிமுகவில் மீண்டும் OPS? செல்லூர் ராஜு கொடுத்த அப்டேட்

image

தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி எடுப்பதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 23, 2026

இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

image

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <>eshram.gov.in<<>> வாயிலாக உடனடியாக அப்ளை பண்ணுங்க.

News January 23, 2026

பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேறியது

image

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்த <<18932257>>தீர்மானம்<<>> நிறைவேறியது. தீர்மானத்தை CM முன்மொழியும்போது, திமுக ஏதோவொரு தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதை செய்வதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், PM மோடியை சந்திக்கும் EPS இத்தீர்மானம் பற்றி எடுத்துச் சொல்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

நெகிழ வைக்கும் 5 வயது சிறுமியின் போட்டோ!

image

சட்டவிரோதமான குடியேற்றத்திற்கு எதிராக USA அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மின்னசோட்டா மாகாணத்தில், அதிகாரிகளால் 5 வயது சிறுமி ஒருவரும் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல், அக்குழந்தை அழுதபடியே நின்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. பள்ளியில் இருந்தே அச்சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!