News November 7, 2025

அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும்: செங்கோட்டையன்

image

அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18222737>>தனது ஆதரவாளர்கள்<<>> நீக்கப்பட்டது பற்றி பேசிய அவர், எதிர்த்து பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவது கட்சியையும் அந்நபரையும் பலவீனப்படுத்தும் என தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் EPS CM ஆனார் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News January 28, 2026

ஆம்பூரில் அதிகாலையில் அதிர்ச்சி!

image

ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் எல்லையில் பாலூர் ஊராட்சி பகுதியில் இன்று (ஜனவரி 28) அதிகாலை ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் ஆலயத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை திருடியுள்ளனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 28, 2026

ரேஷன் கடை திறந்திருக்கா? ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம்

image

ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் கடை மூடியிருக்கும், பல நேரங்களில் கேட்கும் பொருள் இல்லை என்பார்கள். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க, ஒரு SMS போதும்! ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணில் இருந்து 89399 22990 or 97739 04050 எண்களுக்கு PDS 101(என்ன பொருள்கள் உள்ளது என அறிய), PDS 102 (கடை உள்ளதா என அறிய) என மெசேஜ் அனுப்பினால், தமிழிலேயே தகவல்கள் கிடைத்துவிடும். அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News January 28, 2026

ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக

image

அதிமுக கூட்டணியில் அன்புமணியும், திமுக கூட்டணியில் விசிகவும் ராமதாஸ் தரப்பை இணைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே, தவெக தரப்பில் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை ராமதாஸ் தரப்பு உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக நிர்வாகி கூறியுள்ளார்.

error: Content is protected !!