News May 19, 2024
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்?

அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ், அவரை இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு இதை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News September 12, 2025
BREAKING: மதுரை போத்தீஸ் கடையில் ரெய்டு.!

மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
மதுரை அருகே 8 வயது பள்ளி சிறுமி பலியான சோகம்

பாலமேடு அருகே குட்லாடம்பட்டி அருவி அருகே கரடிக்கல் பகுதி தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளி கோட்டைச்சாமி. இவரது மூத்த மகள் நவீசா 8, டி.மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி முடிந்து தனியார் வாடகை வேனில் வந்து வீட்டின் முன் இறங்கினார். அப்போது நவிசாவின் சீருடை கதவில் சிக்கியதால் கீழே விழுந்த நவிசா மீது பின் டயர் ஏறி இறங்கியதில் இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 12, 2025
மதுரை: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.