News December 15, 2025

அதிமுகவில் போட்டா போட்டி போட்டு விருப்பமனு!

image

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. முதல் நாளில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விருப்பமனு வாங்கிச் சென்றனர். அதேபோல், பல நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்காக ஆர்வமுடன் மனுவை வாங்கிச் சென்றனர். சிலர், MGR, ஜெயலலிதாவின் வேடமணிந்து வந்து விருப்பமனு பெற்றுச் சென்றனர்.

Similar News

News March 9, 2026

இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

image

ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முதல்முறையாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 30 ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது எண்ணெய் விலை பீப்பாய்க்கு ₹9,227ஐ தாண்டியுள்ளது. இதுமேலும் உயர்ந்தால் உலக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

News March 9, 2026

BREAKING: விஜய் நேரில் ஆஜராக CBI சம்மன்!

image

‘ஜன நாயகன்’ படத்தை மறுஆய்வு செய்வதை, ரிவைசிங் கமிட்டி திடீரென ரத்து செய்த நிலையில், விஜய்க்கு அடுத்த புதிய சிக்கல் வந்துள்ளது. கரூர் விவகாரத்தில் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்கள் நேர்காணல் இருப்பதால், சிபிஐ விசாரணையை 10 நாள்கள் தள்ளிவைக்க கோரியதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News March 9, 2026

வெறும் ₹10,000 ரூபாய்.. தமிழக அரசின் பீச் வெட்டிங் திட்டம்

image

கடற்கரையில் திருமண நிகழ்வுகள் ஒரு கனவு போன்ற அழகிய அனுபவமாகும். தங்களின் திருமணத்தையும் கடற்கரையில் நடத்த முடியாதா என ஏங்கி தவிப்பவர்களுக்கு பீச் வெட்டிங் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ₹10,000 செலுத்தி www.ttdconline.com-ல் முன்பதிவு செய்தால் போதும் அழகிய கடற்கரையோரங்களில் திருமணங்களை நடத்தலாம். மேலும், உணவு, ரூம் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் தனிக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!