News March 25, 2024

அதிமுகவில் ஐக்கியமான மாற்று கட்சியினர்

image

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சாயல்குடி அருகே இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக, அமமுக கட்சியினர் மற்றும் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலையில்
அதிமுகவில் நேற்று மாலை இணைந்தனர். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றிக்கு உழைப்பதென உறுதி ஏற்றனர்.

Similar News

News July 6, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 6 காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News July 5, 2025

மதுரை – இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

image

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே பணிகளை நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை – ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News July 5, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

ராமநாதபுரம் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். *உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க*

error: Content is protected !!