News October 31, 2025

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

image

ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு, கட்சி அலுவகத்தில் விரிவாக பேசவிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சூரம்பட்டிவலசு, தத்துக்காடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 2,3, மலைக்கோவில், சாஸ்திரி நகர், காந்திஜி சாலை, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பாரதிபுரம், கோவலன் வீதி, நேதாஜி வீதி, மோகன் குமாரமங்கலம் வீதி, காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News October 31, 2025

ஈரோடு: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!