News December 16, 2025

அதிமுகவில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி

image

அதிமுகவில், 349 மனுக்கள் EPS தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், EPS-க்கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

Similar News

News December 20, 2025

உலகக்கோப்பை அணியில் 2 தமிழர்கள்

image

<<18621772>>டி20 உலகக்கோப்பைக்கான<<>> இந்திய அணியில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதே அணிதான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

News December 20, 2025

சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்: நயினார்

image

திமுக என்றுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது இல்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அதிமுக உடைந்ததால்தான் திமுக வெற்றிபெற்றது என்ற அவர், சென்ற தேர்தலிலும் சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ₹50,000 கோடி வரை கொள்ளையடித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 20, 2025

செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

image

வாடிக்கையாளர்களுக்கு சமீப காலமாக BSNL நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹1-ல் ஒரு மாதத்தை சமாளிக்கும் ஆஃபர் ஜன.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிம் வாங்குபவர்கள் ₹1 பிளானில் 30 நாள்களுக்கு தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும்.

error: Content is protected !!