News March 18, 2024
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்

விருத்தாசலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். அப்போது விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், மாநில பேரவை துணை செயலாளர் அருள்அழகன் , மண்டல செயலாளர் வக்கீல் அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 12, 2026
கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 12, 2026
நெய்வேலி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

நெய்வேலி அடுத்த காட்டுக்கூனங்குறிச்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (60). இவர் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணிராஜை கைது செய்தனர்.
News February 12, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


