News March 10, 2026
அதிமுகவில் இணைந்த மதிமுகவின் முக்கிய தலைவர்!

மதிமுக மாநில நிர்வாகி கோடையடி ராமசந்திரன், கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள விருதுநகரில் நடந்த இந்த மாற்றம் திமுக கூட்டணிக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News March 31, 2026
‘இந்திய கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கவில்லை’

ஹார்முஸ் நீரிணையை கடப்பதற்கு இந்திய கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்பாதை குறுகலாக இருப்பதாலேயே கப்பல்கள் வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பாரசீக வளைகுடாவில் இன்னும் 20 இந்திய கப்பல்கள் இருப்பதாகவும், அதில் 5 LPG & 4 கச்சா எண்ணெய் கப்பல்கள் உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 31, 2026
மார்ச் 31 : வரலாற்றில் இன்று

*1727-ஐசக் நியூட்டன் நினைவு நாள் *1865–மேற்கத்திய மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் மருத்துவர் ஆனந்தி ஜோஷி பிறந்தநாள் *1889–ஈபிள் டவரின் தொடக்க விழா கொண்டாட்டம் *1928–அரசியல்வாதி இராம.அரங்கண்ணல் பிறந்தநாள் *1962–ராம்கி பிறந்தநாள் *1965–தமிழறிஞர் தொ.மு.பாஸ்கர தொண்டைமான் நினைவு நாள் *1966– நிலவின் சுற்றுவட்டத்தை லூனா 10 விண்கலம் வலம் வந்தது *1980–தடகள ஜாம்பவான் ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு நாள்
News March 31, 2026
ரூபாய் மதிப்பு சரிவு.. நிதியமைச்சரின் பதில்

ரூபாய் மதிப்பு சரிவை பற்றி கவலைப்பட தேவையில்லை என FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேற்காசியாவில் போர் சூழலால் ரூபாயின் மதிப்பு 4.1% சரிந்துள்ளதாகவும், அதேநேரம் தென்கொரியாவின் won(4.6%), தாய்லாந்து Baht(5.5%) அதிகம் சரிந்துள்ளதாகவும் கூறினார். இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளதால் இந்தியாவை பலரும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


