News February 26, 2026

அதிமுகவின் 10 திட்டங்களுக்கு ₹1 லட்சம் கோடி தேவை!

image

அதிமுக இதுவரை அறிவித்துள்ள 10 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹1 லட்சம் கோடி கூடுதல் நிதி தேவைப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. *2.23 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ₹10,000 (₹22,300 கோடி).*குலவிளக்கு (₹53,520 கோடி). *இருசக்கர மானியம் (₹1,250 கோடி). *பொங்கல் பரிசு (₹2,230 கோடி). *ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் (₹3,500 கோடி மானியம்) பட்டதாரி உதவித்தொகை(₹4,800 கோடி). இது SM-ல் விவாதமாக மாறியுள்ளது.

Similar News

News March 9, 2026

சிக்ஸர் மழை.. வைரலாகும் போலீசாரின் பதிவு

image

பந்துகளும், பேட்ஸ்மேன்கள் காணாமல் போவதாக வந்த புகார்கள் தொடர்பாக போலீசாரின் ​​X பதிவு வைரலாகி வருகிறது. நியூசி., பேட்டிங் வரிசை காணாமல் போவதாக புகார்கள் வருகின்றன, இதற்கு காரணம் பும்ரா தான் என்று டெல்லி போலீசார் பதிவிட்டுள்ளனர். உபி மற்றும் அகமதாபாத் போலீசார் பந்துகள் காணாமல் போவதாக வந்த புகார் தொடர்பாக பதிவுக்கு நமது பேட்ஸ்மேன்கள் தான் அதை சிக்ஸருக்கு அனுப்புவதாக வேடிக்கையாக பதிலளித்துள்ளனர்.

News March 9, 2026

60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கொடூரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதிக்கு நேர்ந்த கொடூரம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நள்ளிரவில் 70 வயது முதியவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, அவரது 60 வயது மனைவியான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

News March 9, 2026

வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

image

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் சூழலால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசு சரிந்து ₹92.31-ஆக உள்ளது. இதன் எதிரொலியால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக குறைந்து வரும் தங்கம், எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடும்.

error: Content is protected !!