News April 10, 2025

அதிமுகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகல்

image

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான, இன்ஜினியர் சந்திரசேகர் இன்று தனிப்பட்ட பணி காரணமாக, தன்னை கட்சி பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 21, 2025

கோவை: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

image

கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>https://eservices.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தமிழகத்தில் உள்ள நிலம் தொடர்பான விவரங்களை வழங்குகிறது. இதில் பொதுமக்கள் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்றவற்றிற்கு, இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 21, 2025

கோவையில் 56 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

image

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.

News August 21, 2025

கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!