News December 20, 2025

அதிமுகவின் தமிழ்மகன் உசேன் இறந்துவிட்டாரா? CLARITY

image

தமிழ்மகன் உசேன் இறந்துவிட்டதாக X-ல் தகவல் பரவிவருகிறது. இந்நிலையில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என அதிமுக பதிவிட்டுள்ளது. தமிழ்மகன் உசேன் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அதிமுக தலைமை அலுவலகம், அரசியல் நாகரிகம் இன்றி பொய் செய்திகளை பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது எனவும் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன், இத்தகைய தகவல்களை யாரும் நம்பி, பரப்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News December 27, 2025

புதிய வரலாறு படைத்த தீப்தி சர்மா

image

டி20-ல் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக இன்று 3 விக்கெட்டுகளை எடுத்ததால், இந்த பெருமை பெற்றார். இந்தியாவில் 150 விக்கெட்களை கடந்த முதல் வீராங்கனையை மாறிய அவர், சர்வதேச அளவில் 2-வதாக உள்ளார். அதேசமயம் டி20-ல் அதிக விக்கெட்டுகளை(151) வீழ்த்தியவர்களின் பட்டியலில், ஆஸ்திரேலிய வீராங்கனை மேகனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

News December 27, 2025

ஒரே வீச்சில் கடல் கடந்து சாதனை PHOTOS

image

மணிப்பூரைச் சேர்ந்த 3 பருந்துகள், உலகின் மிகவும் அசாதாரணமான பயணங்களில் ஒன்றை நிறைவு செய்துள்ளன. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் 5,000–6,000 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவை அடைந்துள்ளன. ஒரே வீச்சில் ஓய்வில்லாமல் கடலை கடந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வனவிலங்கு விஞ்ஞானிகள், பருந்துகளின் சாட்டிலைட் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி, அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.

News December 26, 2025

ஜனவரியில் மேலும் விடுமுறை.. பள்ளி மாணவர்கள் குஷி

image

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜன.5-ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நாள்காட்டிபடி, ஜனவரியில் மேலும் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது, ஜன.15, 16, 17-ல் பொங்கல் பண்டிகை, ஜன.26 -ல் குடியரசு தினம் ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்படாது. மேலும், 2026-ல் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாள்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாடுங்கள் மாணவர்களே!

error: Content is protected !!