News July 14, 2024
அதிமுகவினர் ஓட்டு யாருக்கு சென்றது?

விக்கிரவாண்டியில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 48.69% வாக்குகளையும், ஒன்றாக தேர்தலை சந்தித்த அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் 43.72% வாக்குகளையும் பெற்றன. ஆனால், இடைத்தேர்தலில் திமுக 63.22%, (சட்டசபை தேர்தலை விட 14.53% அதிகம்) பாமக, பாஜக 28.69% வாக்குகள் பெற்றுள்ளன. இதனால், அதிமுகவினர் ஓட்டு அதிகபட்சமாக திமுகவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. பாமக, நாதகவுக்கு ஓரளவு அதன் வாக்குகள் கிடைத்துள்ளது.
Similar News
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
News November 22, 2025
215 பள்ளி மாணவர்கள் கடத்தல்: பெற்றோர் கண்ணீர்!

நைஜீரியாவில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் 215 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய கும்பல் பள்ளியை தாக்கி 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றது. ஏற்கெனவே இந்த வார தொடக்கத்தில் மற்றொரு பள்ளியில் மாணவிகள் 25 பேர் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் 2-வது கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பெற்றோர்கள் பிள்ளைகளை காணாமல் கதறி வருகின்றனர்.


