News November 1, 2025

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

image

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

Similar News

News November 1, 2025

கரையான் போல ADMK-வை அரிக்கிறார் EPS: சேகர்பாபு

image

செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அதி தீவிரமான, அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால், கரையான் புற்றை அரிப்பது போல, அதிமுகவை EPS அரித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். EPS பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், EPS-ன் நடவடிக்கைகளால் திமுகவின் பலம் தான் அதிகமாகிறது என்றும் தெரிவித்தார்.

News November 1, 2025

₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News November 1, 2025

தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

image

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.

error: Content is protected !!