News December 21, 2024

அதிக மகசூல் இருந்தால் ரூ.5 லட்சம் பரிசு..போட்டிக்கு ரெடியா?

image

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். எனவே இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்குமாறு வேளாண் துறை இணை இயக்குநர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News April 8, 2026

BREAKING: தூத்துக்குடி வந்தார் தவெக தலைவர் விஜய்

image

சென்னையில் இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் தற்போது தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரத்திற்காக தற்போது தனது பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக சென்று வருகிறார். பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

News April 8, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு<> CLICK செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 8, 2026

தூத்துக்குடியில் 694-வது நாளாக தொடரும் போராட்டம்..

image

தூத்துக்குடி அடுத்த பொட்டலூரணியை சுற்றியுள்ள 3 கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி, கிராம மக்கள் நேற்று 694 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். பல வழிகளில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், சுவாசிக்கவே போராடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், இதுவரை ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!