News February 16, 2026

அதிகாலையில் தமிழ் மீனவர்கள் கைது.. கொந்தளிப்பு!

image

காரைநகர் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகள், வலைகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 18, 2026

FLASH: திமுகவில் இருந்து விலகினார்.. அடுத்த இழப்பு!

image

மதுரை, கள்ளிக்குடி திமுக மாவட்ட கவுன்சிலர் சரவண பாண்டியன் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர் தலைமையில் திமுக இளைஞரணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் இணைந்தனர். மதுரையில் மு.க.அழகிரியின் வலதுகரமும், <<19166028>>EX துணை மேயருமான மன்னன்<<>> நேற்று அதிமுகவில் ஐக்கியமான நிலையில், தற்போது திமுகவினர் பாஜகவில் இணைந்துள்ளது. அப்பகுதியில் திமுகவுக்கு அடுத்த இழப்பாக பார்க்கப்படுகிறது.

News February 18, 2026

ஒரு மாணிக்கம் தாகூரை அடக்க முடிந்ததா? தமிழிசை

image

திமுக மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், டிரம்ப் & பாகிஸ்தானை அடக்குனீர்களா என கேட்கும் திமுகவால், ஒரு மாணிக்கம் தாகூரை அடக்க முடிந்ததா என சாடியுள்ளார். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க முடியாத திமுகவுக்கு, பலநாடுகளுடன் குழு அமைத்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் PM மோடி குறித்து பேச தகுதியே இல்லை எனவும் கூறியுள்ளார்.

News February 18, 2026

BREAKING: மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

image

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சிகள் காத்திருந்தன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, மார்ச் 16-ல் இதற்கான தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. பிப்.26-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, கனிமொழி சோமு, NR இளங்கோ, செல்வராசு, GK வாசன் & தம்பிதுரை ஆகிய 6 MP-க்களின் பதவிக்காலம் ஏப்.2-ல் முடிவடைகிறது.

error: Content is protected !!