News April 5, 2025
அதிகாலையில் சரக்கு வாகனம் கோர விபத்து

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (06.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

கிருஷ்ணைரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
கிருஷ்ணகிரி: கனமழை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில் இன்று (நவ.06) தற்போது திடீரென வானிலை மாறியது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், 7,697 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


