News March 2, 2026

அதிகார பகிர்வில் உறுதியாக இருக்கிறோம்: திருமா

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை முதன்முதலில் முன்னெடுத்ததே விசிகதான் என திருமாவளவன் கூறியுள்ளார். இன்னும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், TN அரசியல் அதற்கு இன்னும் கனியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தங்களை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு என்றால் தற்போது அதிக தொகுதிகளை கேட்பதுதான் எனவும், தொகுதி பங்கீடு வலிமைக்கு ஏற்ப அமையவேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

Similar News

News April 5, 2026

BREAKING: வெள்ளியங்கிரியில் அடுத்தடுத்து இருவர் பலி

image

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மதுரையைச் சேர்ந்த சீனிவாசன்(48) நேற்று உயிரிழந்தார். முன்னதாக நேற்று அதிகாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன்(35) உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த இந்த மரணங்கள் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் போதிய மருத்துவ பரிசோதனைக்குப் பின் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 5, 2026

திருமாவுக்கு திமுக அழுத்தம்: EPS

image

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடப் போவதில்லை என நேற்று திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே திருமா போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டார் என்று EPS விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை என சாடிய அவர், அடிமையாகவே கூட்டணி கட்சிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News April 5, 2026

கேஸ் தட்டுப்பாடு.. மாதம் ₹25,000 இழப்பீடு: விக்கிரமராஜா

image

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மூடப்​பட்ட கடைகளுக்கு அரசு மாதம் ₹25,000 இழப்​பீடு வழங்க வேண்​டும் என விக்​கிரம​ராஜா வலி​யுறுத்​தி​யுள்​ளார். போர்க்​கால அடிப்​படை​யில் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் கூறியுள்ளார். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்​டால் ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!