News May 27, 2024
அதிகாரி முக்கிய ஆலோசனை

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்கியுள்ளதால் மின்னோட்டத்திற்கு தடை ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதை தவிர்ப்பது குறித்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகரிக்கும் என்பதால் மின்பாதைகளில் ஊடுருவும் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
தென்காசியில் போட்டியிட நகரமன்ற தலைவர் விருப்ப மனு

திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு வரும் மார்ச் 6 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.
News March 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2026
தென்காசி: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.!

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் சாலை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த மூதாட்டியின் உடலுடன் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


