News June 2, 2024

அதிகாரியை மிரட்டிய ஊராட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அடுத்த பட்டதாரி பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற ஊராட்சி தலைவர் லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.  வட்டாட்சியர் மஞ்சுளா ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பிரேம் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

image

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 4, 2025

தி.மலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் FINANCIAL ADVISER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்துகொள்ளலாம். தி.மலையில் வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!