News August 5, 2024
அதிகாரிகள் இடமாற்றத்தால் எந்த மாற்றமும் வராது – உதயகுமார்

46 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போது இபிஎஸ் தும்மினாலும் பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் கூறினார். கள்ளச்சாராய மரணம், தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா ? என ஆர்.பி. உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 31, 2026
மேலூர் அருகே 4 வழிச்சாலை கார் விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் பைக்கில் நேற்று சென்ற போது, வெள்ளமலைப்பட்டி சந்திப்பு அருகே, நாகர்கோயிலை சேர்ந்த ரெம்மிங்டன் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மதுரை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<
News January 31, 2026
மதுரை அருகே கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரமேஷ்(23). இவர் மேலூர் திருப்பத்தூர் ரோட்டில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஒய். கொடிக்குளம் கணேசன் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பலமாக அடிபட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


