News April 8, 2025
அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

மணவெளி தொகுதியில், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ.51.56 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.
Similar News
News October 19, 2025
புதுச்சேரி: மாநில காங்கிரஸ் தலைவரின் தீபாவளி வாழ்த்து

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தீபாவளி வாழ்த்து செய்தியில். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதை போல், நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்ற ஒளியை ஏற்றுவோம் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி, சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
News October 18, 2025
நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் முதலமைசர் ரங்கசாமி, நாட்டியாலயா நிறுவனர் ராஜமாணிக்கம் எழுத்தாளர் கலா விசு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினர். சாஸ்திராலயா ஆசிரியர்கள் உமா ரமேஷ், மாதவி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 13 மாணவிகளின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.