News January 10, 2025
அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இணையவழி சான்றுகள், பட்டா மாற்றம், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம், விலையில்லா வேட்டி, சேலை விநியோகம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Similar News
News September 12, 2025
கள்ளகுறிச்சி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)