News December 17, 2025
அதிகமாக விற்பனையான போன் எதுன்னு தெரியுமா?

கீபேட் போன் முதல் டச் ஸ்கீரின் மொபைல் வரை ஏராளமான மாடல் போன்கள் வெளிவந்துள்ளன. இதில், சில போன்கள் மட்டுமே உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில், இதுவரை அதிகளவில் விற்பனையான மாடல் போன்கள், எவ்வளவு விற்பனையாகியுள்ளன, என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த போன் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
Similar News
News December 18, 2025
BREAKING: மக்களுக்கு சலுகை.. அறிவித்தார் விஜய்

தவெக ஆட்சியில் மக்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மக்களுக்கான சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது இந்த விஜய். ஆனால், மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அப்படி யாரேனும் ஓசில போற ஓசில போற ( பொன்முடி பேச்சு) என பெண்களை அசிங்கப்படுத்தினால், நாங்கள் தட்டிக்கேட்போம் என ஆவேசமாக கூறினார்.
News December 18, 2025
‘பராசக்தி’ வெறும் அரசியல் படம் மட்டுமில்லை

மொழிப் போராட்டத்தை மையப்படுத்தியே பராசக்தியின் கதைக்களம் அமைந்திருந்தாலும், அதில் வேறு சில எமோஷனல் விஷயங்களும் இருப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இரு சகோதரர்களின் (SK & அதர்வா) பாசமும், வெவ்வேறு சித்தாந்தங்களை பின்பற்றும் அவர்களுக்கு இடையேயான மோதலும் படத்தில் எமோஷனலாக கூறப்பட்டுள்ளதாம். வரும் ஜனவரி 14-ம் தேதி ‘பராசக்தி’ வெளியாகவுள்ளது.
News December 18, 2025
BREAKING: மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் விஜய்

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்; என்னுடன் கடைசி வரை நிற்பீர்கள் என எனக்குத் தெரியும். அதேபோல், தமிழக மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.


