News January 4, 2026

அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

image

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக சிக்கன் உள்ளது. அடிக்கடி சிக்கன் சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால், அதிலுள்ள கலோரி, கொழுப்பினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பொரித்த சிக்கனில் இருக்கும் கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்னை ஏற்படலாம். அதனால், அளவாக சிக்கன் சாப்பிடுவதே நல்லது.

Similar News

News January 21, 2026

மனிதர்களால் முடியாததை பட்டாம்பூச்சி செய்கிறது

image

மனிதர்களின் கண்ணுக்கு தெரியாத UV ஒளியை பட்டாம்பூச்சிகளால் காணமுடியும். இவை உணவருந்துவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் புற ஊதா (UV) ஒளியை பயன்படுத்துகின்றன. எந்த பூவில் அதிக தேன் இருக்கிறது என்பதை கண்டறிய UV ஒளியை பயன்படுத்துகின்றன. அத்துடன், இவற்றின் இறக்கைகளில் மற்ற உயிரினங்களுக்கு தெரியாத தனித்துவமான UV ஒளி இருக்கிறது. இதை வைத்து தனது துணை யார் என்பதை சரியாக கண்டறியவும் செய்கின்றன. SHARE.

News January 21, 2026

நடிகர் கமல் ராய் காலமானார்

image

மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழில் ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம், கொல்லிலக்கம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகாந்திகம், வச்சலம், ஷோபனம், தி கிங் மேக்கர் மற்றும் லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 21, 2026

தப்புக் கணக்கு போட்டாரா செங்கோட்டையன்?

image

அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி கை கொடுக்காமல் போனதால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். ஆனால், தற்போது NDA கூட்டணியில் இணைந்த <<18913412>>TTV தினகரனை<<>> EPS வரவேற்றுள்ளார். அதேபோல, NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!