News November 29, 2024
அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செங்கல்பட்டில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

இன்று செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 7, 2025
சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
News August 7, 2025
சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் செங்கல்பட்டு

கார் உற்பத்தி அதிகம் என்பதாலே ஆசியாவின் டெட்ராய்டு என்ற பெயர் சென்னைக்கு உண்டு. சென்னையின் இந்த பெருமைக்கு செங்கல்பட்டும் காரணம் . ஆட்டோ மொபைல் துறையில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மறைமலை நகரில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. *சென்னைக்கே பெருமை சேர்க்கும் நம்ம மாவட்ட பெருமையை ஷேர் பண்ணுங்க*