News February 2, 2025
அண்ணா தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் ஊதிய உயர்வு தேவை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேமுதிகவின் தொழிற்சங்கமும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
சென்னையில் நடிகை மீது நடிகர் பரபரப்பு புகார்!

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை நடிகை மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பி, தன்னை மன உளைச்சலுக்கு உண்டாக்கி, பணம் பறிக்க முயல்வதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2026
ராயபுரம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 11, 2026
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.


