News March 23, 2024
அண்ணாமலை 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News February 2, 2026
காரமடை அருகே விபத்து: 4 பேர் காயம்

காரமடை அருகே உள்ள புகழ்பெற்ற குருந்தமலை கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை காண இரண்டு இருசக்கர வாகனங்களில் தலா இருவர் என மொத்தம் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். கிட்டம்பாளையம் அருகே சென்றபோது, இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 2, 2026
கோவை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 2, 2026
BREAKING கோவையில் மூன்று பேர் தற்கொலை!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனி தம்பு நகரை சேர்ந்த தம்பதி கமலேஷ் – இலக்கியா. இவர்களது மகள் யச்சிதா ஏஞ்சல்(10). கமலேஷ் மின்வாரிய அதிகாரி. மூவரும் நேற்றிரவு உறவினர்களுக்கு வீடியோ மூலம் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பியுள்ளனர். விரைந்து சென்ற உறவினர்கள் போலீசார் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது, மூவரும் தற்கொலை செய்து தெரிந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


