News March 30, 2024
அண்ணாமலை பணம் அளித்த வீடியோ பழையது

அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுப்பது போல் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ ஜூலை 2023-க்கு உரியது என்றும், எனவே தேர்தல் விதிமுறைகளின் வரம்பிற்குள் வராது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 26, 2025
கோவை: கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்!

மேட்டுப்பாளையம் – கெண்டையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் குமார். சலூன் கடை உரிமையாளரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று முந்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 25, 2025
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நீக்கம்

கோவை மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட செயலாளராக நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ் செல்வனை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
News September 25, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.09.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.