News December 21, 2025

அண்ணாமலைக்கு BIG NO.. EPS-ன் அடுத்த டிமாண்ட் இதுவா?

image

ஏற்கெனவே அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கிய பிறகே அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது. இதுபோதாதென்று மேலும் மேலும் டிமாண்டுகளை தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் அடுக்குகிறாராம் EPS. அதாவது, அதிமுகவுக்காக அண்ணாமலை பிரசாரம் செய்யக்கூடாது எனவும், டிடிவி, OPS இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் பல கண்டிஷன்களை EPS போடுகிறார் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 22, 2025

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News December 22, 2025

2026 தேர்தலில் இருந்து விலகுகிறேன்: நடிகர் அறிவிப்பு

image

2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தனது கட்சியை (சமக) கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத், விருதுநகரை குறிவைத்து காய் நகர்த்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், தேர்தலில் நிற்க மாட்டேன்; தனது வாய்ப்பை பிறருக்கு விட்டுக் கொடுப்பேன் என சரத் கூறியுள்ளார். அதேநேரம், அவரது மனைவி ராதிகா தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 22, 2025

லீவுக்கு ஊருக்கு போறீங்களா.. இந்த APP முக்கியம்!

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக லீவு வரவுள்ளது. இந்த லீவில் ஊருக்கு ரயிலில் செல்ல விரும்புவோர், IRCTC-ன் ‘Railone’ APP-பை டவுன்லோட் செஞ்சிக்கோங்க. ரயில் பயணத்தின் எந்த ஒரு தேவையையும் இதன்மூலம் பூர்த்தி செய்யலாம். முன்பதிவு, முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது, PNR தகவல், உணவு ஆர்டர் செய்வது, புகார் கொடுப்பது என அனைத்தும் ஒரே APP-ல் கிடைக்கும். இந்த APP PlayStore-ல் உள்ளது. SHARE IT.

error: Content is protected !!