News January 14, 2026

அண்ணாமலைக்கு துணையாக ஓடோடி வந்த சீமான்

image

<<18833393>>அண்ணாமலை<<>> மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என ராஜ்தாக்கரே கூறியதை சீமான் கண்டித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக கால்களை வெட்டுவேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அண்ணாமலை தனி நபரல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அவருக்கு துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

விஜய் CM ஆவாரா? நடிகர் சிவக்குமார் பதில்

image

விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள் பெரிதாக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் விஜய்யின் முதல்வர் கனவு நிறைவேறுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவக்குமார் ஒரேவரியில் பதில் அளித்துள்ளார். விஜய் முதல்வராக வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என அவர் தெரிவித்துள்ளார். சிவக்குமாரின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

News February 10, 2026

திமுகவில் இணைந்தார்.. அதிமுகவுக்கு ஏமாற்றம்

image

கொங்கு மண்டலத்தில் திமுகவினரை இழுக்க அதிமுகவும், அதிமுகவினரை இழுக்க திமுகவும் போட்டிப் போட்டு வருகின்றன. குறிப்பாக கரூரில் இந்த விவகாரம் அனல் பறக்கிறது. கடந்த 8-ம் தேதி திமுக மாவட்ட நிர்வாகியும், Ex கவுன்சிலருமான பசுவை கி.வடிவேல் MR விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஒரே நாளில் மனம் மாறிய அவர், இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமானது பேசுபொருளாகியுள்ளது.

News February 10, 2026

எங்கே செல்லும் ராமதாஸின் பாதை?

image

ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த ராமதாஸின் நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. விசிகவால் திமுகவிலும், அன்புமணியால் அதிமுகவிலும் இணையமுடியாமல் இருக்கும் அவரது தரப்பு, சீமானிடமும் விஜய்யிடமும் அப்ரோச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களோ அதனை மறுத்திருக்கின்றனராம். இதனால் ராமதாஸ் தரப்பினர் தேர்தலை எண்ணி மனஉளைச்சலில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!