News March 16, 2025
அண்ணனும் தம்பியும் ஒரே கருவறையில்

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் விநாயகரும் முருகனும் இணைந்து ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர். தெய்வங்கள் இருவரையும் ஒரே சந்நிதியில் தரிசிப்பது பெரும் வரம். சொத்துவழக்குப் பிரச்னைகள், குடும்பச் சிக்கல்கள், உறவு பிரச்னைகள், சகோதர, சகோதரிகளிடையே உருவாகும் சண்டைகள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். சனீஸ்வரரின் அன்னை சாயாவின் அம்சம் நிறைந்த தலவிருட்சம் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
Similar News
News March 16, 2025
இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (மார். 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதுகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொது மக்கள் இரவு நேரங்களில் அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 16, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 16, 2025
வழிவிடு முருகன் கோவில் 85 ஆம் ஆண்டு உத்திர பெருவிழா

இராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோவில் 85 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
11/04/25 வெள்ளிகிழமை பங்குனி வழிவிடு முருகனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று இரவு 7 மணிக்கு மேல் பூக்குழி வைபவம் நடைபெறும். 12.04.25 சனிக்கிழமை அன்று வழிவிடு முருகன் திருவீதி உலா நடைபெறும். *ஷேர்