News September 16, 2024
அணைகளுக்கு நீர்வரத்து கடும் சரிவு

நெல்லை மாவட்டம் பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 487 கன அடியாகவும்,மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. சேர்வலாறு, கொடுமுடி ஆறு, நம்பியார், வடக்கு பச்சை யாறுஆகிய அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலுமாக தடை செய்யபட்டதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
நெல்லை: சிறுத்தை தாக்கியதில் பெண் காயம்

காரையாரில் வசித்து வருபவர் ஜோயி. இவரது மனைவி சுஜதா இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் மகன்கள். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்கள் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் வளர்த்து வரும் நாயை பிடிக்க வந்த சிறுத்தையை தடுக்க முயன்ற போது சிறுத்தை தாக்கியதில் சுஜாதா காயமடைந்தார்.
News November 15, 2025
நெல்லை: 10th முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை உறுதி!

நெல்லை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


