News November 22, 2025
அணு குண்டாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது!

அணு ஆயுத தாக்குதல், சுனாமி பேரலைகள், புயல்களை தாக்குப்பிடிக்கும் வகையில் முதற்கட்டமாக செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. 78,000 டன் எடையில் மிதக்கும் வகையிலான இந்த தீவு, 2028-ல் செயல்பாட்டிற்கு வரும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 138 மீட்டர் நீளம், 85 மீட்டர் அகலம் கொண்ட இந்த தீவில், 238 மனிதர்கள் 4 மாதங்களுக்கு எந்த தேவையும் இல்லாமல் வசிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம்.
Similar News
News February 11, 2026
பச்சைத் துரோகம் செய்யும் திமுக: சீமான்

உரிமைக்காகப் போராடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையை திமுக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் அறிவித்தும், ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். உடனே மாதாந்திர உதவித்தொகையை ₹5000 ஆக உயர்த்தி வழங்குவதோடு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
News February 11, 2026
விஜய் ‘டீ’, பாஜக ‘காஃபி’.. அண்ணாமலை

NDA-வில் இன்னும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்போது தவெகவுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜய் ’டீ’, நாங்க (பாஜக) ‘காஃபி’.. இரண்டையும் ஒரே பாத்திரத்தில் எப்படி போட முடியும் எனக்கூறி கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற பாஜக மீது திமுகவினர் மேடைக்கு மேடை பொய் பேசுவதாகவும் சாடினார்.
News February 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 606▶குறள்: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. ▶பொருள்: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.


