News January 30, 2026
அட முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா!

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்கும் *கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவும் *எலும்புகளை வலுப்படுத்தும் *காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மையை சரிசெய்யும் *உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.
Similar News
News February 7, 2026
OPS-ன் புதிய அவதாரம் இதுவா? இப்படி இறங்கிட்டாரே!

தனித்து விடப்பட்ட OPS, அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இனி ஏலக்காய் பிஸினஸை வளர்க்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுக்கும், தவெகவுக்கும் செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் அவரிடம், நல்ல பதவி தருவதாக பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதால், அதுகுறித்த பரிசீலனையில் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில், OPS தொழிலை வளர்ப்பாரா (அ) பாஜகவில் இணைவாரா என கேள்வி எழுந்துள்ளது.
News February 7, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. அமைச்சரின் அப்டேட்!

மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் தாய், மகள், மகன் என அனைத்து தரப்புக்கும் மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருவதாக கூறினார். அதேநேரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்த பிறகு பஸ் எங்கே செல்கிறது எனக் கூட கேட்காமல் சிலர் ஏறி பயணம் செய்வதாக சர்ச்சையாக பேசியுள்ளார்.
News February 7, 2026
U-19 அணிக்கு கிடைத்த பம்பர் பரிசு.. BCCI இன்ப அதிர்ச்சி!

6வது முறையாக U-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ₹7.5 கோடி பரிசு தொகையை BCCI அறிவித்துள்ளது. பொதுவாக U-19 பிரிவினருக்கு பரிசுத் தொகை வழங்கப்படாது. ஆனால், இம்முறை இளம் வீரர்களை ஊக்குவிக்க நினைத்த BCCI, அவர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.


