News September 7, 2025

அட்வான்ஸ் புக்கிங்: 20 சவக்குழிகள் தோண்டப்பட்ட சம்பவம்!

image

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான அடக்கவிடத்தில், ஒரே நாளில் 20 குழிகள் தோண்டப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், “செடி, கொடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் வந்தது. அவர்கள் விரைவாக வேலையை முடித்ததால், வாடகை வீணாக போகிறதே என்று குழிகளை தோண்டினோம்,” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழிகள் மூடப்பட்டது.

Similar News

News September 8, 2025

கோவையில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

கோவை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

கோவையில் இதை செய்தால் கரண்ட் பில்லே வராது!

image

கோவை மக்களே ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம். பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டத்தில் ரூ.78000 வரை பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கும். pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.மேலும் கோவை ஆவாரம்பாளையத்தில் இதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.(SHARE பண்ணுங்க)

News September 8, 2025

கோவை அருகே விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

image

புளியம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் மயில்சாமி, தினேஷ் ஆகியோர் நேற்று டூவீலரில் கோவை எம்.கவுண்டம்பாளையம் அருகே வேகமாக சென்றுள்ளனர். அப்போது, வளைவில் திரும்பும் போது எதிரே வந்த டூவீலர், பின்னால் வந்த கார் மீது மோதியது. இதில் டூவீலர்களில் வந்த கருப்புசாமி, மயில்சாமி, தினேஷ் மூவரும் படுகாயமடைந்தனர். மயில்சாமி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!