News November 19, 2025

அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

image

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 8, 2026

போர் நிறுத்தத்திற்கு ஈரானின் 10 நிபந்தனைகள்

image

அமெரிக்கா உடனான போர் நிறுத்தத்திற்கு <<19595698>>ஈரான் <<>>10 நிபந்தனைகளை விதித்துள்ளது. *மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் *ஈரான் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் நீரிணை இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் *அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான சர்வதேச உரிமையை அங்கீகரிக்க வேண்டும் *ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

News April 8, 2026

மழை வெளுக்கப் போகுது.. வந்தது அலர்ட்

image

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 14-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த 2 நாள்கள் மழை பெய்யக்கூடுமாம். உஷார் மக்களே!

News April 8, 2026

BREAKING: தலைமைச் செயலாளர் மாற்றம்

image

தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமைச் செயலாளராக சாய்குமாரும், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் கடந்த ஆட்சியில் EPS-ன் தனிச் செயலாளர்(1) ஆக இருந்தவர் ஆவார்.

error: Content is protected !!