News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 30, 2026
கூட்டணி என்றாலே மன வருத்தம் தான்: வானதி

கூட்டணி என்றாலே அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுவது இயல்பு என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். MP தேர்தலில் 1% ஓட்டு பெற்ற அமமுகவுக்கு 11 சீட்டுகள், பாஜகவுக்கு 27 சீட்டுகள் என ஒதுக்கியது சரிதானா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், MP தேர்தல் கணக்கை பாஜக காட்டினால், அவர்கள் 2021 தேர்தல் கணக்கை காட்டுவதாகவும், ஆனால் அனைவரும் வெல்லவேண்டும் என்பதே கூட்டணியில் உள்ளவர்களின் எண்ணம் எனவும் தெரிவித்தார்.
News March 30, 2026
வெள்ளி ₹50,000 குறைந்தது.. மேலும் குறைய வாய்ப்பு!

வெள்ளி விலை கடந்த 4 நாள்களாக விலை மாற்றமின்றி 1 கிராம் ₹250 என்ற நிலையிலேயே உள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மந்த நிலையே காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹50,000 குறைந்து ₹2,50,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 30, 2026
பிரேமலதாவை எதிர்க்கும் தமிழரசி.. யார் இவர்?

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக நட்சத்திர வேட்பாளரான பிரேமலதாவை எதிர்த்து பாமக மகளிர் சங்க மாநில செயலாளர் தமிழரசி போட்டியிடுகிறார். வன்னியர் சங்க காலத்திலிருந்து ராமதாஸுடன் இணைந்து பணியாற்றியவர். கட்சியினருடன் நட்புடன் பழகக்கூடிய அவர், 2016-ல் பாமக தனித்து நின்றபோது, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு 29 ஆயிரம் வாக்குகளை பெற்றவர். <<-se>>#TNElection2026<<>>


