News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 29, 2026
முழு ஆண்டு தேர்வு.. நாளை பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1-ல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி 2 நாள்களுக்கு முன்னதாக, அதாவது நாளைக்குள் (மார்ச் 30) பள்ளி நிர்வாகத்திடம் வினாத்தாள்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. EMIS தளத்தில் வினாத்தாள்களை அலுவலர்கள் டவுன்லோடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களே, பதற்றமின்றி தேர்வை எழுதுங்கள். ALL THE BEST!!!
News March 29, 2026
EPS-க்கு சாதிய எண்ணம் உள்ளது: கிருஷ்ணசாமி

திமுகவும், அதிமுகவும் பட்டியலின மக்களை காழ்ப்புணர்ச்சியுடன் புறக்கணிக்கின்றன என கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். NDA கூட்டணியில் தாங்கள் கேட்ட 3 தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை எனவும் கூறினார். அதிமுகவின் வாக்கு சதவீதம் முன்பை விட இப்போது குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். EPS-க்கு சாதிய எண்ணம் மேலோங்கி உள்ளதால், புதிய தமிழகம் கட்சியை புறக்கணிக்கிறார் என சாடியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ஸ்டாலின் சொன்ன HAPPY NEWS

திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட ஸ்டாலின், மகளிர் வங்கி கணக்கில் சர்ப்ரைஸாக ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து பேசினார். அப்போது, இத்திட்டத்தை பாஜக முடக்க நினைத்ததாகவும், அந்த சதியை முறியடித்து 3 மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் ₹2,000 கோடை சிறப்பு நிதியை வழங்கியதாக கூறினார். தற்போது, மகளிர் உரிமைத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தியும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.


