News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2026
அதிமுகவுடன் இணைந்தனர்.. திமுக கூட்டணி ஷாக்

அரசியல் சதுரங்க விளையாட்டில் கடைசி நேர ஆட்டம் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில், கொமதேக கொள்கை பரப்புச் செயலாளர் அசோகன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
News April 8, 2026
எங்களை ஒன்று சேர்த்தது அமித்ஷா தான்: TTV

தங்களை ஒன்று சேர்த்தது பாஜகதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதிமுக & அமமுகவுக்குள் அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான், பங்காளி சண்டைதான் இருந்தது. அதை தீர்த்து வைத்தவர் அமித்ஷா தான் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
News April 8, 2026
FLASH: கடலூரில் கால் பதிக்கும் விஜய்!

கடலூரில் நாளை தேர்தல் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூரில் விஜய் வேனில் இருந்தவாரே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், தவெகவினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். இன்று நெல்லையில், விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளது கவனிக்கத்தக்கது.


