News December 25, 2025
அடையாள எண் பெற: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்ட விவசாயிகள் டிச.28-ஆம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதம மந்திரி கௌரவத் தொகை, பயிர்க் காப்பீடு பெற இந்த எண் அவசியம் எனவும், விவசாயிகள் அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வேளாண்மை அலுவலகங்களுக்குச் சென்று ஆதார், கைப்பேசி எண், பட்டா விவரங்கள் கொடுத்து எண்ணைப் பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\
News December 29, 2025
நாகை: பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் அரசு பள்ளி, வனக்கல்லூரி மாணவ மாணவிகள் என 60 பேர் 12 வழித்தடங்களில் ஈடுபட்டு உள்ளனர். சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியை
வன கோடியக்கரை சரக அலுவலர் ஜோசப் டேனியல் தொடங்கி வைத்தார்.
News December 29, 2025
நாகை அருகே ரயில் மோதி துடிதுடித்து பலி!

தேமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (36). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருக்கண்ணங்குடி ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல ஸ்டாலின் முயன்றார். அப்போது திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஸ்டாலின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


