News January 2, 2026
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில். பிரதான சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இத்தகவல் அறித்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் அடிக்கடி சாலை விபத்துகளில் மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது.
Similar News
News January 22, 2026
விழுப்புரம் :சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தங்கராஜ் லேஅவுட் கம்பன் நகர் பகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.22) ஆய்வு நடைபெற்றது.
News January 22, 2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, ஆட்சியார் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ், உட்பட பலர்.
News January 22, 2026
விழுப்புரம் மக்களே நாளை இதை மிஸ் பண்ணிடாதீங்க!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இதை ஷேர் செய்யவும்


