News October 22, 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி 7 வயது சிறுவன் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துகதிரவன், இவரின் 7 வயது மகன் ஜெகதீஸ்வரன் நேற்று புதுகாணலி பஸ் ஸ்டாப் அருகே சாலையில் குறுக்கே நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்து கதிரவன் புகாரில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Similar News

News October 21, 2025

கரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

News October 21, 2025

கரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர்: நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கால்பகுதியில் ஆபரேஷன் செய்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று(அக்.20) மன விரக்தியில் இருந்த மாணிக்கம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!