News March 8, 2025
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழ வியாபாரி பலி

காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2025
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கிடா விருந்து

திருப்பூர் 43வது வட்ட திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News March 9, 2025
இந்து முன்னணியினர் 300 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.
News March 9, 2025
கால்நடை கணக்கெடுப்பு – 93% சதவீத பணிகள் நிறைவு

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர். கடந்த, அக்., மாதம் துவங்கிய இப்பணி, கடந்த மாதம், 25ம் தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இம்மாதம் கடைசி வரை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை, 93 % கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது என தெரிவிக்கபட்டுள்ளது.