News March 24, 2025

அடையாளம் காணப்பட்ட இடங்களில் அகழாய்வு: வலியுறுத்தல்

image

செய்துங்கநல்லூர் அருகே உள்ள சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் உள்ள அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழாய்வு செய்ய வேண்டும். இந்திய பன்முகத்தன்மை கொண்ட உண்மையான வரலாற்றை அறிய அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டியது காலத்தில் கட்டாயம் என, நெல்லையில் நடைபெற்ற  பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு சார்பிலான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Similar News

News April 16, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.

News April 15, 2025

தூத்துக்குடி மாவட்டம் உருவானது பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி உருவாக்கப்பட்டது. சிதம்பரனார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக கஸ்தூரி தங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

News April 15, 2025

17-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!