News April 12, 2024
அடுத்த 4 நாட்களுக்கு மழை

தேனி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
தேனி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நகர்புற வாழ்வாதார இய்க்கம் ஆகியவை சார்பில் வருகிற நவம்பர் 8 ந் தேதி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க மெரிக் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். வேலைநாடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க.
News November 4, 2025
தேனி: தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (45). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன், ராமசாமியின் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் முருகன் மீது வழக்கு (நவ.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
தேனியில் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு

இந்தாண்டு நடைபெற உள்ள தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக விளையாட்டு விடுதி கபடி அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.3) துவங்கியது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இன்று போட்டிகள் முடிவடைகிறது.


