News January 22, 2026
அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கை ரெடி: தவெக

திமுக, அதிமுக போலவே தவெகவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பணம், இலவச பொருள்கள், லேப்டாப் என மற்ற கட்சிகள் கொடுப்பது தேர்தலுக்காகவே என மக்களுக்கு தெரியும் என்றும், தவெக நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கையை விஜய் தருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 11, 2026
கட்சியில் இருந்து விலகுகிறேன்.. அதிமுகவில் ஐக்கியம்?

உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் இல்லாததால் IJK-வில் இருந்து விலகுவதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அறிவித்துள்ளார். EPS-ஐ சந்தித்ததால், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட லீமா ரோஸை பாரிவேந்தர் அழைக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அவர், இணைப்பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 11, 2026
செல்வப்பெருந்தகைக்கு அந்த தகுதி கிடையாது: வன்னி அரசு

விசிக, காங்., இடையிலான மோதல் நீண்டுகொண்டே செய்கிறது. காங்., கட்சிக்குள் இருக்கும் குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பூசலை முதலில் செல்வப்பெருந்தகை சரிசெய்ய வேண்டும் என்று வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை, அவருக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு இன்னும் செல்வப்பெருந்தகை வளரவில்லை என்றார்.
News February 11, 2026
EPS-க்கே விபூதி அடிக்கப் பார்த்த நிகழ்ச்சி: அதிமுக எச்சரிக்கை

தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் அதிமுக சார்பில் பிப். 18ஆம் தேதி JJ-EPS Awards 2026 வழங்க இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் கட்டணம் செலுத்துமாறும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதை மறுத்துள்ள அதிமுக தலைமை, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.


